province Northern
===ஆலய உருவாக்கம் மற்றும் அமைப்பு===
ஐரோப்பியர் காலத்தில் பெரிய கோவில்களுக்கு செல்வதற்கு அச்சப்பட்ட மக்கள் கிராமிய தெய்வங்களின் வழிபாட்டில் அதிகளவு நாட்டங் கொண்டு வழிபட்டனர். அக்காலத்திலேயே இற்றைக்கு 175 வருடங்களின் முன்பு தெய்வீக அருள் பெற்ற வரம்புக்குலத்து சிவத்திரு.வை.ஆறுமுகம் அவர்களின் சொப்பனத்தில் தோன்றிய அம்பாள் தில்லைக்கடலோரம் வந்திருக்கிறேன் அடைக்கலம் கொடு என வேண்டினார். திடுக்குற்ற ஆறுமுகம் அவளது அன்புக்கட்டளையை ஏற்று கடற்கரையோரம் சென்று இறை அருளால் உருப்பெற்று பேழையில் வந்த அம்பாளை மார்போடு அணைத்தெடுத்து பூவரசம் மரநிழலில் வைத்து மரந்தடி பனை ஓலைகளால் வேய்ந்து அம்பாளிற்கான ஆலயத்தை அமைத்தார் எனவும், பின் சுண்ணாம்பு மண் கலந்து கட்டுவித்தார் எனவும் இவை கி.பி1845 ஆம் ஆண்டு நடைபெற்றதாகவும் குறிப்பிடப்படுகிறது. அவ்வாறே அவரது மகன் சிவத்திரு.ஆ.சிவசம்பு அவர்களால் 1952 ஆம் ஆண்டு அர்த்த மண்டபம் 18.5×18 அடி அளவு விஸ்தீரணத்தில் அமைக்கப்பட்டது. தொடர்ந்து அடியார்கள் அம்பாளை தரிசிப்பதெற்கென 2004 ஆம் ஆண்டு அடியார்களால் 40.5×26 அடி அளவுகளைக்கொண்ட மகா மண்டபம் அழகான காளி அம்மன் உருவச்சிற்பங்களும் முன்வாசலில் மகிடாசுரனை சங்காரம் செய்த சிங்கத்தின் மீது அமர்ந்த பிடாரி அம்மனும் மயிலேறு முருகனும் விக்கினம் தீர்க்கும் விநாயகனும் நாக சிற்பங்களும் என திருவாட்டி இ.இராஜேஸ்வரி அவர்களின் நேரடி மேற்பார்வையின் கீழ் நிர்மாணிக்கப்பட்டு வழங்கப்பட்டது.
ஆலயமுன் பக்கம் அம்பாளுக்கு ஒளியேற்றும் வெளிச்சக்கூடு மற்றும் உயர்ந்து ஓங்கி நிற்கும் காண்டாமணிக்கோபுரமும் இடது பக்கம் பூஞ்சோலையும் திருமஞ்சக்கிணறும் வடகிழக்கு மூலையில் தீர்த்தக்கேணியும் கோவிலின் வலது புறம் (தெற்கு) மடப்பள்ளி, களஞ்சிய அறை அமைந்துள்ளதுடன் வடக்கு வாசலின் வலது புறம் வாகனசாலை மற்றும் கோவில் தேவைகளுக்கான கட்டிடம் 2019 ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது. மேலும் ஆலய வீதி எங்கும் தலவிருட்சமான பூவரசு மர நிழலுடன் தில்லைவெளி அம்பாளின் ஆலயம் சுமார் இரண்டே கால் ஏக்கர் விஸ்தீரணமும் சுற்று மதிலும் அடியார் அன்பில் அமையப்பெற்று அமைக்கப்பட்டுள்ளது. அதாவது மூலவள், தலம், தீர்த்தம், தலவிருட்சம் போன்றவற்றை கொண்ட ஆலயமாகும்.
'''"தீராத நோய்களை தீர்த்திடுவாள் தில்லை நாயகி"'''
===ஸ்ரீ பிடாரி அம்பாளின் கருவறை===
கருவறையில் வீற்றிருக்கும் ஸ்ரீ பிடாரி அம்பாள் பார்ப்பதற்கு கருங்கல்லில் அமைந்தது போல் கறுப்பாக கோபமுடையவளாக காணப்படுகிறது. எனினும் அம்பாள் செஞ்சந்தனக்கட்டை அல்லது தில்லை மரத்தினால் ஆனவள் என குறிப்பிடப்படுகிறது. கொடிய நோய்களை தீர்க்கும் அதேவேளை அம்பாள் குற்றங்களை பொறுக்காதவள் எனவும் தலைமட்டுமே அமைந்த உருவாக காட்சி தருகிறாள். கீழ்ப்புறமாக அமைந்துள்ள பின் தோன்றிய பேச்சி அம்பாள் முக்கோணவடிவில் சாந்தமுடையவளாக மண்ணிற தோற்றத்தில் உள்ளாள்.
'''"பிடாரி அம்பாள் சாபத்திற்கு ஆளானால் சந்ததியே அழிந்துவிடும்" '''
===திருக்குளிர்த்தி பொங்கலும் வேள்வித் திருவிழாவும்.===
வைகாசி மாதம் வந்ததும் நயினாதீவு மக்கள் இல்லங்களை தூய்மைப்படுத்தி அம்பாளின் வேள்விக்கு ஆயத்தமாகிவிடுவர். கும்பஸ்தானம் ஆரம்ப நாள்முதல் ஒருநேர உணவோடு விரதமிருந்து அம்பாளின் மகாவேள்வி கண்டு விநாயகப்பானை அமுதுண்டு விரதம் துறப்பர்.
வைகாசி விசாகத்துடன் கூடிய ஒரு வெள்ளிக்கிழமை கும்பஸ்தானத்துடன் தொடங்கும் திருவிழாவின் ஏழாம் நாள் நயினை வாழ் சைவ அடியார்களின் இல்லங்களில் சென்று தண்டல் நிகழ்வு இடம்பெறும். எட்டாம் நாள் வெள்ளிக்கிழமை யாழ் நகர தர்மகர்த்தாக்களின் பரம்பரை வர்த்தக நிலையத்திலிருந்து விநாயகப்பானை எழுந்தருளி (வேள்வித்திரவியங்கள், இளநீர், பொங்கல் பண்டங்கள், பழங்கள் உட்பட) கோவிலை வந்தடையும்.
மறு நாள்(ஒன்பதாம் நாள்) சனிக்கிழமை காத்தவராயன் கும்பம் வீதியுலா வந்தடைந்ததும் பொங்கல் ஆரம்பிக்கப்படும். தொடர்ந்து விசேட திரவிய சங்காபிடேகமும் பொன்பதித்த வலம்புரிச்சங்கால் மூலிகை அபிடேகமும் அம்பாளுக்கு இடம்பெறும். குருமணிகளின் வேதாகமங்கள் முழங்க வேள்விக்குண்டம் சுடர் விட்டெரியும். இளநீர், பால், தயிர், பஞ்சாமிர்தங்கள் கொண்டு அம்பாள் குளிர்விக்கப்படுவாள். பெரும் பாறை ஓங்கி ஒலிக்கும். அடியவர்கள் தங்கள் நேர்த்திக் கடன்களை நிறைவேற்றி அம்பாளிடம் வேண்டுகை செய்வார்கள். மூலஸ்தான, எழுந்தருளி அம்பாளுக்காக உருவகிக்கப்பட்ட பிரதான கும்பங்கள் சுற்றி வந்து கும்ப நீர் ஊற்றப்படும். அதன்பின் காத்தவராயன் மடை விநாயகப்பானை பொங்கல், முக்கனிகள் பரப்பப்பட்டு அடியவர்களின் படையலும் அம்பாளுக்கு அர்ச்சிக்கப்பட்டு மிருக பலிக்குப் (1950ஆம் ஆண்டுடன் நிறுத்தப்பட்டது) பதில் நீத்துப்பூசணி வெட்டப்பட்டு குருமணிகள் பஞ்சதீர்த்தம் தெளித்து மலர் தூவுவதுடன் தீப ஆராதனை இடம்பெற்று வருடாந்த திருக்குளிர்த்திப் பொங்கல் வேள்வித் திருவிழா இனிதே நிறைவுறும். அடியவர் காணிக்கை பொருட்கள் ஏலத்தில் விடப்படுவதுடன் அன்றிரவு கும்ப உத்தாபனமும் பத்தாம் நாள் பிராயச்சித்தமும் இடம்பெறும்.
நித்திய பூசை, விசேட பூசைகளுடன் மாதந்தோறும் பல்வேறு விழாக்களும் அம்பாளுக்கு சிறப்பாக செய்யப்படுகிறது. Однако примечательно, что во время основания храма в качестве особых праздников проводились только Вайкаси Велви Понгал и Читраи Рашпурут.
===Храмовая линия Дхармакартхов – лидеры и женские стражи===
Храмовая линия Дхармакартхи, освятившие Амбалу и построившие храм, происходят по мужской линии Шиватиру Арумугама из Арамкулама. Один из них, индус, знающий добродетели и ритуалы Амбала и обладающий эффективностью, обычно считается старшим и назначается лидером. Аналогично Шиватиру б. Дочери Сивасамбу — хранительницы женственности.
'''Храм'''''''''''''''''
1845–1913 Шиватиру Арумугам
1913–1936 Сиватиру А. Катхиравелу
1936–1968 Шиватиру А. Сивасамбу
1968–1993 Сиватиру AC Натараша
1993–1998 Сиватиру AC Парамасами
1998–2021 Сиватиру АК Паланивел
2021 г. – по настоящее время Шиватиру А.К.Н.Катиравеллай
Наряду с ними, Сиватиру А.Ч. Падманатан, Сиватиру А.Ч. Гунаретнам, дети Сиватиру А.Ч. Гунаретнам и т. д. были преданы Амбалу как первые Дхармакартхи, а Деиватируми Ко.Пакьялакшми, Тирувати Ма.Сотеесвари и сын Пакиялакшми Сиватру Ко.Вамадасан были посвящены к Амбалу.
Подробнее: https://en.wikipedia.org/wiki/Nainativu ... bal_Temple
Храм Наинантиву Тиллаивели Шри . Амбал ⇐ Васина Википедия
-
Автор темыwiki_en
- Всего сообщений: 93688
- Зарегистрирован: 16.01.2024
-
- Похожие темы
- Ответы
- Просмотры
- Последнее сообщение
Мобильная версия